கூட்டணிகுறித்து இனி விஜயகாந்த்தான் முடிவுசெய்ய வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். .

சவுகார் பேட்டையில் நடந்த சென்னையில்வாழும் பிற மாநிலத்தவர்களுக்கான பாஜக ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,

தேமுதிக.வைப் பொறுத்தவரை ஏற்கனவே நாங்கள் பல முறை அவர்களை சந்தித்து கூட்டணி அமைப்பதுதொடர்பாக எல்லா விஷயங்களையும் பேசி இருக்கிறோம். அவர்கள் கட்சிமாநாட்டில் கூட்டணி தொடர்பான அறிவிப்பார்கள் என எதிர்பார்த்தோம். இனி எங்கள் கூட்டணியில் இணைவது குறித்து விஜயகாந்த்தான் முடிவுசெய்ய வேண்டும்.

பாமக. எங்கள் கூட்டணியில் இணையும் என்ற நம்பிக்கை எங்களுக்குள்ளது. இன்னும் இரண்டு நாட்களுக்குள் கூட்டணி உறுதிசெய்யப்படும். 8ம் தேதி நரேந்திர மோடி கூட்டத்தில் கூட்டணியில் இடம்பெறும் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றார்.

Leave a Reply