பாஜக.,வின் பிரச்சார பொதுக்கூட்டம் கொல்கத்தாவில் பிரிகேட் பரேடு மைதானத்தில் நடந்தது . இதில் பேசிய பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ‘அனைத்து தொகுதியையும் பா. ஜனதாவிற்கு கொடுங்கள், மம்தாவுக்கு ஓட்டளிப்பது பயனில்லாதது’ என்று கூறியுள்ளார்.

கூட்டத்தில் மோடி மேலும் பேசியதாவது : இது போன்றதொரு பிரம்மாண்ட கூட்டத்தை இதற்குமுன் நான் கோல்கட்டாவில் பார்த்ததில்லை. குஜராத்திற்கும் மேற்குவங்கத்திற்கு மிகப்பெரிய நெருங்கிய உறவு உள்ளது; விவேகானந்தரின் கனவுப்படி இந்தியா உருவாகவேண்டும்; ரவீந்திரநாத் தாகூரின் சகோதரர் மேற்வங்க வளர்ச்சிக்காக பாடுபட்டவர்; 2014 தேர்தல் முந்தையதேர்தல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது; ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சாமானிய மனிதனைப்பற்றி கவலை கொள்ளவில்லை; காங்கிரஸ் அரசின் 60 ஆண்டுகால தவறான ஆட்சிக்கு முடிவுகட்டும் விதமாக வரும் லோக்சபா தேர்தல் அமையும்; அரசியல் சாணக்கியர்களுக்கு சாமானிய மனிதர்கள் முடிவுகட்டுவார்கள்.

மேற்குவங்கம் வளர்ச்சிபெற்றால், நாடு சர்வதேச நாடுகளில் தலையானதாக விளங்கும். வரும் தேர்தல் முடிவுகள் குறித்த கருத்துகணிப்புகளும், அரசியல் யூகங்களும் தவறாக போகப்போகின்றன. மக்கள், 60 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியை வெறுத்துவிட்டனர். நாடு தற்போது வளர்ச்சியை விரும்புகிறது. விவேகானந்தரின் கனவுகளை நினைவாக்கும் வகையில், நாட்டை வளர்ச்சிபாதையில் கொண்டுசெல்ல வேண்டும்.

மூன்றாவது அணியைப் பற்றி பேசுபவர்கள், தற்போதைய சூழ்நிலையில் ஆதரவுக் காற்று எந்த பக்கம் வீசிக் கொண்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். பாராளுமன்ற தேர்தலுக்கு பின் பா.ஜ.க ஆட்சியமைக்கும்.

இந்தியாவை மூன்றாம்தர நாடாக மாற்றுவதே அவர்களின் நோக்கமாகும். அதனால்தான் அவர்கள் ஆட்சி செய்துவரும் கிழக்கு மாநிலங்கள் அனைத்தும் பின்தங்கி உள்ளன. இந்திய அரசியலில் இருந்து மூன்றாவது அணி என்ற கருத்திற்கு பிரியாவிடை கொடுப்பதற்கான நேரம் வந்து விட்டது. மேற்கு மாநிலங்களில் இதுவரை எந்த மூன்றாவது அணியும் ஆட்சி அமைத்ததில்லை.

எப்போதெல்லாம் தோ்தல் வருகிறதோ, அப்போதெல்லாம் ஏழைமக்களை பற்றியும், மதச்சார்பின்மை பற்றியும் பேசத்தொடங்கி விடுகின்றனர். ஆனால் முஸ்லிம்களின் வளர்ச்சிக்காக அவர்கள் எதையும் செய்ததில்லை. முஸ்லிம்களை வாக்காளர்களாக மட்டுமே கருதுகின்றனர்.

குஜராத்தில் சிறுபான்மையினரின் தனி நபர் வருமானம் உயர்ந்துள்ளது , அரசாங்கம் என்பது தேசியவாதம் என்ற ஒரே ஒரு மதப் புத்தகத்தை தான் வைத்திருக்க வேண்டும்

நாட்டில் வளர்ச்சி தேவை. மருந்துகள் தேவையில்லை. ஏழைகளுக்கு உணவு தேவை. இளைஞர்களுக்கு வேலை தேவை. கிராமங்களுக்கு மின்சாரம் தேவை. சிறுவர்கள் கல்வியை பெறவேண்டும். ஆனால் இங்கு அரசியல் கட்சிகள் மனிதனி அடிப்படை தேவை குறித்து கவலை படவில்லை. நீங்கள் பெங்காலின் மக்கள், இங்கு மாற்றம் வேண்டும் என்று 35 ஆண்டுகள் ஆட்சி செய்த இடது சாரிகளை விட்டி புதிய கட்சியை கொண்டு வந்தீர்கள். ஆனால் உங்களால் மாற்றத்தை உணர முடிந்ததா? .

இங்கு விரைவில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்க மக்கள் புரட்சிகரமானவர்கள். நீங்கள் சட்டசபைத் தேர்தலில் மிகவும் பெரிய முடிவை எடுத்தீர்கள். தற்போது நீங்கள் மிகவும் தைரியமான முடிவை எடுக்க வேண்டும்.

நீங்கள் 2014 பாராளுமன்றத் தேர்தலில் எங்களுக்கு ஒருவாய்ப்பு கொடுங்கள். வருகிற பாராளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்காளத்தில் உள்ள அனைத்து தொகுதிகளையும் எங்களுக்குகொடுங்கள். மம்தா பானர்ஜிக்கு ஓட்டளிப்பது மிகவும் பயனில்லாதது என்று மோடி கூறியுள்ளார்.

Leave a Reply