பாஜக கூட்டணியில் பா.ம.க இணைவது குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தமிழக பா.ஜ.க தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பொன் ராதாகிருஷ்ணன், பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.க இணைந்துவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும், பா.ம.க.,வுடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் முடிவாகிவிடும்

8–ந் தேதி வண்டலூரில் நடைபெறும் நரேந்திரமோடி பொதுக் கூட்டத்தில் பா.ஜனதா தொண்டர்கள் 5 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் இது தவிர பொதுமக்களும் பெருமளவில் வருவார்கள் என்று நம்புகிறோம்..தமிழகத்தை பொறுத்தவரை பாராளுமன்ற தேர்தலில் பாஜக. கூட்டணி முதல் நிலை கூட்டணியாக இருக்கும் என்று தெரிவித்தார்

Leave a Reply