பாமக.வுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெறுவதாக பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கூட்டணியில் பாமக இணைவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும், நாளைக்குள் இறுதிமுடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். சென்னையில், பாஜக தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்றத்தேர்தல் தொடர்பான வெற்றியின் கீதம் என்ற பாடல் குறுந்தகடு வெளியிடப்பட்டது.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், பல்வேறுகட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார். ஊழல்குறித்து பேச காங்கிரஸ் கட்சிக்கு தகுதியில்லை என்றும் அவர் விமர்சித்தார். பேட்டியின்போது, உடனிருந்த கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், பாரதிய ஜனதா கூட்டணியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கவுள்ளதாக அறிவித்தார்.

Leave a Reply