பா.ஜ.க.,வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி சிறு வயதில் டீ விற்றதை காங்கிரஸ் தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில் காங்கிரசாரின் விமர்சனபேச்சை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளும் விதமாக பா.ஜ.க.,வினர் நாடுமுழுவதும் நரேந்திரமோடி பெயரில் ''நமோ'' டீக்கடையை திறந்து வருகின்றனர்.

நரேந்திரமோடி நாளை சென்னை வருகிறார். வண்டலூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

மோடி வருகையையொட்டி தாம்பரம் தொகுதி பா.ஜ.க.,வினர் சார்பில் இரும்புலியூர் பாலம் அருகில் ''நமோ டீஸ்டால்'' என்ற பெயரில் டீக்கடை திறந்துள்ளனர். கட்சியின் தேசிய செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் கடையை திறந்துவைத்தார். பின்னர் பொது மக்களுக்கு இலவசமாக டீ விநியோகித்தனர்.

Leave a Reply