இந்தியாவில் கடந்த 2007ம் ஆண்டு நடந்த சம்ஜோதா எக்ஸ்பிரஸ், ஐதரபாத் மெக்காமசூதி மற்றும் அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு தெரிந்தே நடந்தது என்று சுவாமி அசீமானந்தா பேட்டியின்போது கூறினார் என்ற வார இதழின் செய்தியை .அசீமானந்தா மறுத்துள்ளார்.

அம்லா மத்தியசிறையில் உள்ள அசீமனந்தா பேட்டி கொடுத்தார் என்று வார இதழ் கூறுவது தெளிவில்லாதது மற்றும் அர்த்தமற்றது என்று ஆர்எஸ்எஸ். கண்டனம் தெரிவித்திருந்தது. அசீமானந்தாவிடம் பேட்டி எடுத்ததாக கூறப்படுவதை அவரது வக்கீல் வைத்யாவும் மறுத்திருந்தார்.

இந்நிலையில் சுவாமி அசீமானந்தா அதனைமறுத்து கடிதம் எழுதியுள்ளார். அசீமானந்தா ஆர்எஸ்எஸ். குறித்துதான் பேசியதாக கூறிய தகவல்கள் அனைத்தும் ஜோடிக்கப்பட்டவை என்று கூறியுள்ளார்.

அசீமானந்தா கடந்த 2010 ஆண்டுமுதல் ஜெயிலில் உள்ளார். இந்நிலை அவர் ஜனவரி 9ம் தேதி பேட்டி எடுத்ததாக கூறுவதை மருத்துள்ளார். செய்தியாளரை நான் பஞ்சுலுக்காகோர்ட்டில் பல முறை பார்த்ததாக கூறியுள்ளார். ஆனால் ஜனவரி 9ம்தேதி அவர் ஒருவக்கீலாக வந்தார். எனக்கு உதவிசெய்ய வேண்டும் என்றார். ஆனால் அவரது நோக்கத்தை நான் நிராகரித்து விட்டேன். பின்னர் அவர் என்னிடம் சமூகசேவை வேலைகள் குறித்து ஆலோசிக்க கோரிக்கை விடுத்தார் என்று அசீமானந்தா கூறியுள்ளார்.

மேலும், ஆர்எஸ்எஸ். தலைவர் மோகன் பகவத்குறித்தும், குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குறித்தும் எதுவும் பேசவில்லை என்று கூறியுள்ளார். “அந்தசெய்தியில் செய்தியாளர் சேர்த்தவை எல்லாம் மொத்தமாக பொய் மற்றும் ஜோடிக்கப்பட்டவை. நான் இதுதொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பேன்” என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்

Leave a Reply