திமுக.,வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று வெளியான தகவலை பாஜக. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பாஜக. தலைமையில் வலுவான கூட்டணி அமைந்து விடக் கூடாது என்று சிலசக்திகள் செயல்பட்டு வருகின்றன. எனவே, வலுவான கூட்டணி அமைவதை தடுப்பதற்காக சிலவிஷமிகள் திட்டமிட்டு இந்தவதந்தியை பரப்பிவருகிறார்கள். மக்கள்யாரும் இந்தவதந்தியை நம்பவேண்டாம். எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததோ அந்தகட்சிகளுடன் மட்டுமே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருகிறது. திமுக.வுடன் பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்தார்.

Leave a Reply