தேர்தல்களை கவனத்தில்கொண்டு தமிழக பாஜக முழு உத்வேகத்துடன் செயல்பட்டுவருகிறது.டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டார் மோடி எங்கள் சூப்பர் ஸ்டார் போன்ற பாடல்களுடன் பிரச்சார இசைப் பாடல்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.

‘வெற்றியின்கீதம்’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிடி.யை திருவள்ளூர் மாவட்ட பா.ஜப்.க தலைவர் லோக நாதன் தயாரித்து இருக்கிறார். 9 பாடல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

தமிழக மீனவர்களின் பிரச்சினையை மையமாக வைத்து பொன்.ராதாகிருஷ்ணன் ‘தமிழா… தமிழா…” என்ற பாடலையும், மோடியை பற்றி ‘வெற்றியின் கீதம் சங்கே முழங்கு’ என்ற பாடலையும் எழுதியுள்ளார்.

‘குஜராத்தில் நல்லாட்சி’, ‘நாட்டை முன்னேற்றவாராரு மோடி’ என்ற 2 பாடல்களை தமிழிசை சவுந்தரராஜன் எழுதியுள்ளார். ‘வா வா தலைவா’, ‘நெஞ்சைநிமிர்த்தி நடந்து வாடா’, ‘டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டர் ஸ்டார், மோடி எங்கள் சூப்பர்ஸ்டார்’, ‘சிங்க நடைபோட்டு’ என்ற 4 பாடல்களை சின்னப்பா கணேசன் எழுதியுள்ளார். ‘உலகின்குருவாய்’ என்ற பாடல் மணி தணிகைகுமார் எழுதி இருக்கிறார்.

இந்தபாடல்களுக்கு சிவரூபன் இசை அமைத்துள்ளார். மாணிக்க விநாயகம், வேல்முருகன், பிரியதரிஷினி, சாய்சரண், பாலாஜி, ஜெகதீஷ், சுந்தர் ஆகியோர் பாடியுள்ளனர். 2 பாடல்கள் குத்து பாடல்களாலும், 2 ‘மெலோடி’யாகவும், 2 பாடல்கள் கிராமிய இசையிலும், 2 பாடல்கள் மேற்கத்திய இசையிலும் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தபிரசார பாடல்கள் அடங்கிய சிடி.யை, மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் வெளியிட்டார். அதன் முதல் சிடி.யை இல.கணேசன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் தேசிய செயலாளர் தமிழிசை சவுந்தர ராஜன், அமைப்புச் செயலாளர் மோகன் ராஜுலு, வானதி சீனிவாசன், சரவணபெருமாள், லலிதா குமாரமங்கலம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply