சென்னை வண்டலூரில் பாஜக சார்பில் இன்று நடைபெறும் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி உரையாற்றுகிறார்.

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறhர். டெல்லி, பெங்களூரு, கான்பூர்,மீரட் , கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டங்களில் பல லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தமிழகத்தில் தேர்தல் கூட்;டணி குறித்த பேச்சு வாரத்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ,பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறhர். சென்னை வண்டலு}ரில் இன்று மாலையில் நடைபெறும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி உரையாற்றுகிறhர். இந்த மாநாட்டுக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

நரேந்திர மோடியின் சென்னை வருகையை ஒட்டி சென்னை விமான நிலையம் உட்பட பல்வேறு பகுதி[களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு] ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பொதுக்கூட்டத்தை ஒட்டி மாலை 5 மணிக்கு அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து தனி விமானத்தில் நரேந்திர மோடி சென்னை பழைய விமான நிலையம் வருகிறhர். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு மாபெரும் வரவேற்பு அளிக்க பாரதிய ஜனதா கட்சியினர் திட்டமிட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து காரில் வண்டலு}ர் செல்லும் அவர், அங்கு பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறhர். திருச்சிக்கு அடுத்தபடியாக சென்னையில் இன்று நரே;ந்திர மோடி பங்கேற்கும் இந்த மாபெரும் பொதுக்கூட்டம், தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply