அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்த காங்கிரஸ கட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமானால் அது பாஜக கூட்டணியினால் மட்டுமே முடியும். நாடுமுழுவதும் மக்களின் பேராதரவை பெற்ற மோடியால் மட்டுமே முடியும் என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

சென்னை வண்டலூரில் சனிக்கிழமை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக் கூட்டத்தில் இல. கணேசன் மேலும் பேசியதாவது : மோடி பங்கேற்றுள்ள இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும் சில தலைவர்களை பங்கேற்க முயற்சித்தோம். கூட்டணி முடிவாகாததால் அது நடக்காமல் போய் விட்டது.

இன்று இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், ம.தி.மு.க இணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈஆர்.ஈஸ்வரன் மற்றும் புதிய நீதிக்கட்சியின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். மேலும் ஒரு அரசியல் கட்சியுடன் பேச்சவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். விரைவில் அந்தக்கட்சி பாஜக கூட்டணியில் இணையும். வரும் மக்களவைத் தேர்தல் வெறும்தேர்தல் மட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் காங்கிரஸ் ஆட்சியின் செயல்பாடுகளை எடை போடுவதற்கான கருத்துக்கணிப்பாகும்.

அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்த காங்கிரûஸ வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றால் அது பாஜக கூட்டணியால் மட்டுமே முடியும். நாடுமுழுவதும் மக்களின் பேராதரவை பெற்ற மோடியால் மட்டுமே முடியும். எனவே 3}வது அணிக்கு ஆதரவளித்து வாக்குகளை வீணாக்காமல் மோடியைபிரதமராக்க அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று இல.கணேசன் தெரிவித்தார்

Leave a Reply