நரேந்திரமோடி பிரதமரானால் இலங்கை தமிழர் பிரச்னை, மினவர்களின் மீதான தாக்குதல், மின் பற்றாக்குறை உள்ளிட்ட தமிழர்களின் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்பட்டு விடும் என பா.ஜ.க மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

சென்னை வண்டலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது:

மற்ற மாநிலங்களைவிட தமிழகத்தில் மோடிக்கு மிகப் பெரிய ஆதரவு இருக்கிறது. தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமங்களில் "வீடு தோறும் மோடி உள்ளம் தோறும்தாமரை' என்ற பிரசார இயக்கத்தை நடத்தினோம். இதற்கு மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. மோடி பிரதமரானால் இலங்கை தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்பிரச்னை, நதி நிர் பிரச்னை, மின் பற்றாக்குறை என அனைத்துப் பிரச்னைகளும் தீர்க்கப்படும். குஜராத்தைப்போல மது இல்லாத தமிழகம் உருவாகும். மோடியை பிரதமராக்க தமிழக மக்கள் தயாராகிவிட்டனர் என்றார்

Leave a Reply