நரேந்திரமோடி இந்தியாவின் சாதனையாளர். அவரின் சாதனைகளின் காரணமாகத் தான் 4வது முறையாக குஜராத்தின் முதல்வராக உள்ளார். இந்தியாவுக்கு ஒருசாதனையாளர் பிரதமராக வரவேண்டும் என இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரி வேந்தர் தெரிவித்துள்ளார்.

சென்னை அருகே வண்டலூரில் நடைபெற்ற பாஜக. பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
குடும்ப அரசியலை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியது காங்கிரஸ்தான். அந்தக் கட்சியை பின்பற்றித் தான் பல மாநிலக்கட்சிகளும் குடும்ப அரசியலை பின்பற்றிவருகின்றன. ஊழல் நிறைந்த காங்கிரஸ் அரசை தோற்கடித்து, மோடியை பிரதமர் நாற்காலியில் உட்கார வைக்கவேண்டும் என்றார் பாரிவேந்தர்.

Leave a Reply