புகார்கொடுக்க வந்த தங்களைத் தாக்கியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ மீது பெண்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர் . டெல்லி ஆம் ஆத்மிகட்சியின் எம்எல்ஏ.வான மனோஜ்குமார் அலுவலகத்திற்கு அப்பகுதியை சேர்ந்த பெண்கள் சிலர் சாலைவசதி குறைபாடு மற்றும் குடிநீர் பிரச்சனை குறித்து புகார்தெரிவிக்க சென்றுள்ளனர்.

ஆனால்,அப்பெண்களை உள்ளேவிட எம்எல்ஏ. மற்றும் அவரது ஆதரவாளர்கள் மறுத்ததாகவும், தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து நேராக நியூஅசோக் போலீஸ் நிலையத்திற்கு சென்ற அப்பெண்கள் எம்எல்ஏ மனோஜ்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராகபுகார் அளித்துள்ளனர். புகாரை அடுத்துமனோஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவுசெய்த போலீசார், இதுதொடர்பாக விரைவில் விசாரணை ‘நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply