காங்கிரஸ் அல்லாத ஆட்சியே முத்துராமலிங்க தேவரின் முக்கியகொள்கையாக இருந்தது. அதுவே அதிமுக.,வின் கொள்கையும்கூட; தேவரின் கொள்கைகளை வென்றெடுக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை," என்று ராமநாதபுரம், கமுதி அருகே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில், முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார்.

கமுதி பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் உள்ளது. நேற்று, நினைவிடத்திற்கு வந்த முதல்வர் ஜெ., தங்க கவசம் அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின், அவர் பேசியதாவது: தேசியத்தையும், தெய்வீகத்தையும் இருகண்களாக கொண்டு செயல்பட்ட தேவர்; நாட்டின் சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டவர்.அகில இந்திய பார்வர்டுபிளாக் கட்சியின் தமிழ்மாநில தலைவராகவும் இருந்தார். மக்கள் நலனுக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் பாடுபட்டவர்.'வீர மில்லாத விவேகம் கோழைத்தனம்; விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்' என்று முழங்கியவர் தேவர். ஆன்மிகம், தேசியம், பொதுவுடமை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, காங்கிரஸ்., அல்லாத ஆட்சி ஆகியவை அவருடைய கொள்கைகள்.இக்கொள்கைகளை தான், நாங்கள் பின்பற்றிவருகிறோம். மக்கள் ஆதரவுடன், தேவரின் கொள்கைகளை வென்றெடுக்கவேண்டிய காலம், வெகுதூரத்தில் இல்லை. அதற்கான காலம், கனிந்து விட்டது. அந்த லட்சியத்தை அடைய, என்றென்றும் நீங்கள் துணை நிற்கவேண்டும் என்று பேசினார்.

Tags:

Leave a Reply