எனது அரசியல்பயணம் இன்னும் முடியவில்லை என பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த 55 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய எனது அரசியல் பயணம் இன்னும் முடியவில்லை ”கராச்சியில் (தற்போது பாகிஸ்தானில் உள்ள நகரம்) எனது 14½ வயதில் ஆர்எஸ்எஸ். இயக்கத்தில் இணைந்த போது வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்தேன். வீட்டைவிட்டு வெளியேறிய நான் முதலில் கராச்சியிலும், பிரிவினைக்குப்பின் ராஜஸ்தான் மாநிலத்திலும் ஆர்எஸ்எஸ். பிரசாரகராக பணிபுரிய தொடங்கினேன்

அதைத்தொடர்ந்து 55 ஆண்டுகளுக்கு முன்பு எனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய போது எனது வாழ்க்கையின் அர்த்தம் மேலும் மேம்படுத்தப்பட்டது. முதலில் பாரதீய ஜனசங்கத்திலும், பின்னர் பாஜக.,விலும் பணியாற்றி வருகிறேன். என்னுடைய இந்த அரசியல் பயணம் இன்னும் முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தனது வலைத் தளத்தில் மலரும் நினைவுகளை பதிவுசெய்துள்ள அத்வானி, சமீபத்தில் முதுபெரும் எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கை சந்தித்தது பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார். கடந்த 2ந் தேதி நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் காலடி எடுத்துவைத்துள்ள இந்த முதிர்ந்த வயதிலும், இலக்கிய படைப்பில் ஆர்வத்துடன் உள்ள குஷ்வந்த் சிங்கை அவர் பாராட்டி இருக்கிறார்.

Leave a Reply