பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திரமோடியின் செல்வாக்கு அதிகரித்து வருவதால், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வெளிநாட்டினரின் ஆர்வம் இப்போதே அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைய வாரங்களாக, இந்தியாவில் முதலீடுதொடர்பான கோரிக்கைகளுக்கு வெளிநாட்டினரின் உறுதிமொழி அதிகரித்திருப்பதாக டெல்லியை சேர்ந்த கம்பெனி சட்டநிறுவன உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். பொதுத்தேர்தலில் மோடி ஆட்சியை பிடிப்பதன் மூலம் வணிகத்துக்கு சாதகமான அரசு அமையும் என்ற நம்பிக்கை அதிகரித்துவருவதாக சர்வதேச நிதிநிறுவனமான ஏ.என்.இஸட் தனது அறிக்கையில் கூறியுள்ளது. இந்தியாவில் முதலீடுசெய்வதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளதாக பிடபிள்யூசி நிறுவனமும் தெரிவித்துள்ளது.

Tags:

Leave a Reply