வரும் மக்களவைத் தேர்தலில் பண பலத்தையும் மீறி தமிழகத்தில் பாஜக கூட்டணி அமோக வெற்றிபெறும் என ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் திங்கள் கிழமை நடந்த கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க வந்த அவர் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க அ.தி.மு.க ஆகிய கட்சிகளை புறக்கணித்து வாக்காளர்கள் நரேந்திர மோடியை இந்தியாவின் பிரதமராக்கப் போவது உறுதியாகி விட்டது. தமிழகத்தின் வாழ்வாதாரங்களை வஞ்சித்ததுடன், இலங்கை கடற் படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்தாக்குதல் நடத்துவதற்கு உறுதுணையாக நிற்கும் மத்தியகாங்கிரஸ் அரசு, தற்போது போர்க்கப்பலையும் இலங்கைக்கு தாரைவார்க்க துடிக்கிறது. தமிழகத்துக்கும், தமிழர்களுக்கும் துரோகம்செய்துள்ள காங்கிரஸ் கட்சியை அரசு அதிகார பீடத்திலிருந்து தூக்கி எறியவேண்டும். இதேபோல இலங்கையில் உள்ள தமிழர்கள் படுகொலைக்கும் காரணம் காங்கிரஸ் அரசுதான்.

Leave a Reply