குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை சந்திப்பதில் என்ன தவறு என்று மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவார் கேள்வி எழுப்பியுள்ளர். இதனை பாஜக வரவேற்றுள்ளது.

இந்நிலையில் தானேவில் நடைபெற்ற பொதுகூட்டம் ஒன்றில் நேற்று முன்தினம் சரத்பவார் பேசினார். அப்போது மோடியை சந்திப்பதில் தவறு என்ன என கேள்வி எழுப்பினார். மத்திய உணவுஅமைச்சர் என்ற முறையில் மாநில முதல்வர்களை சந்தித்து நாட்டின் உணவு உற்பத்தியை அதிகரிப்பது குறித்தும் உணவுபாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பேசி வருவதாகவும், அந்தமுறையில் ஒடிசா சென்றால் அந்தமாநில முதல்வர் நவீன் பட்நாயக்கையும், குஜராத் முதல்வர் மோடியையும் சந்தித்ததாகவும் கூறினார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவருடனோ அல்லது சீனாவை சேர்ந்தவருடனா நான் பேசினேன்? இதில் என்னதவறு இருக்கிறது. என கேள்வி எழுப்பினார்.

சரத்பவாரின் பேச்சை பாஜக வரவேற்றுள்ளது. அரசியலில் தீண்ட தகாமை மிகவும் மோசமானது. சரத் பவாரின் ஒப்புதல் வரவேற்கத்தக்கது. இது நல்லவிஷயம். யாரும் யாரையும் சந்திப்பதில் எந்த பிரச்னையும் இருக்ககூடாது என பாஜக எம்பி கீர்த்தி ஆசாத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply