குஜராத் மாநிலம் கோபா என்ற இடத்தில் நடந்த மாநில பாஜக புதிய அலுவலக திறப்பு விழா நடந்தது. ‘ஸ்ரீகமலம்’ என்ற அந்த புதிய அலுவலகத்தை பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி திறந்து வைத்தார். இந்த விழாவில் கலந்துகொண்ட பாஜக மூத்த தலைவர் அத்வானி பேசியதாவது,

வாஜ்பாய் அரசை காட்டிலும் நரேந்திர மோடியின் அரசு மத்தியில் சிறப்பாக ஆட்சிசெய்யும். ஏற்கனவே மத்தியில் இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியை விட தற்போதுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அதிகபலத்துடன் உள்ளது.

காங்கிரஸ்சின் தற்போதைய இலக்கு, குஜராத் முதல்வர் மோடி குறித்தே உள்ளது. முக்கிய பிரச்சனைகளை திருப்பிவிடலாம் என நினைக்கிறது. அது இனிநடக்காது. மன்மோகன் சிங்கை முழுநேர பிரதமராக யாரும் ஏற்றுக்கொள்ளவே இல்லை. நரேந்திரமோடி, அப்படி இருக்க மாட்டார் என்றார்

Leave a Reply