ஊழலற்ற, நேர்மையான பாதையில் நாட்டை கொண்டு செல்ல மோடியால் மட்டுமே முடியும் பா.ஜ.க 300 இடங்களுக்குமேல் கைப்பற்றி தனி பெரும்பான்மைபெறும். என, யோகா குரு பாபாராம்தேவ் தெரிவித்துள்ளார்.

கேரளம் செல்லும் வழியில் கோவைவந்த அவர், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது:

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 300 இடங்களுக்குமேல் கைப்பற்றி தனி பெரும்பான்மைபெறும். ஜெயலலிதா, மாயாவதி ஆகியோர் 50 இடங்களுக்குள் பெறுவார்கள். ஊழலற்ற, நேர்மையானபாதையில் நாட்டை கொண்டுசெல்ல மோடியால்மட்டுமே முடியும். எனவே மோடிக்கு தமிழகமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும். தில்லியில் ஆட்சியமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி, அதிகாரத்துக்கு வந்தபிறகும் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என்று தனிச்சையாகச் செயல்பட்டுவருகிறது என்றார். பகல் 12 மணிக்கு விமானம் மூலம் கோவை வந்த அவர், உடனடியாக கார்மூலமாக பாலக்காடு புறப்பட்டுச்சென்றார்.

Leave a Reply