மக்களவையில் புதன்கிழமை தாக்கல்செய்யப்பட்ட இடைக்கால ரயில்வே பட்ஜெட் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை வழியனுப்பும் பட்ஜெட் என பா.ஜ.க மூத்த தலைவர் அனந்த்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தில்லியில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவை தேர்தலை கருத்தில்கொண்டு ரயில்வே பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்னும் 15 நாள்களில் தேர்தல் ஆணையத்தின் விதி முறைகள் அமலுக்கு வரவுள்ள நிலையில், ரயில்வேபட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதையும் நிறைவேற்றமுடியாது. ஆகையால், இது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை வழியனுப்பும் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. அடுத்தபட்ஜெட்டை நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல்செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply