அமெரிக்க தூதர் நான்சிபவுல் காந்திநகரில் உள்ள இல்லத்தில் குஜராத் முதலமைச்சரும் பி.ஜே.பி.,யின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார்.
.

மோடிக்கு அவர் சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான பூங்கொத்துக்கொடுத்து கைகுலுக்கினார்.

2002ல் குஜராத் கலவரத்தை காரணம் காட்டி நரேந்திர மோடியை அமெரிக்கா புறக்கணித்து வந்தது. .குஜராத் கலவரம் தொடர்பான எந்தவழக்கிலும் மோடிக்கு தொடர்பில்லை என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள போதிலும் அமெரிக்கா தனதுபோக்கை மாற்றிக் கொள்ளவில்லை.நடைபெற உள்ள மக்களவைப் பொதுத்தேர்தலில் பி.ஜே.பி அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தெரியவந்துள்ள நிலையில் மோடி மீதான போக்கை அமெரிக்கா மாற்றிக்கொண்டது. அவரை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நான்சிபவுல் சந்தித்துப் பேசுவதற்கு அனுமதி கேட்கப்பட்டது.

இதற்கு மோடி சம்மதித்ததை தொடர்ந்து நான்சிபவுல் காந்தி நகரில் உள்ள மோடியின் இல்லத்திற்கு சென்றார்.

அவருக்கு சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்திலான பூங்கொத்துகொடுத்து சிரித்த முகத்துடன் கைகுலுக்கினார். பின்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தை விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.

Leave a Reply