இசை அமைப்பாளர் பப்பிலஹரி பாஜக வேட்பாளராக மேற்கு வங்காளத்தில் போட்டியிடுகிறார்.பிரபல இந்திப் பட இசையமைப்பாளர் பப்பி லஹரி. மேற்குவங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர். . சில நாட்களுக்குமுன் டெல்லியில் ராஜ்நாத்சிங்கை சந்தித்து பாரதீய ஜனதாவில் சேர்ந்தார்.

அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவுசெய்து இருப்பதாக கூறப்பட்டது. இதுபற்றி பாஜக மேற்கு வங்காள மாநில தலைவர் ராகுல்சின்காவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

பப்பிலகரி மேற்கு வங்காளத்தை சேர்ந்த மிகப் பெரிய இசைக்கலைஞர். நாடுமுழுவதும் அவர் பிரபலமானவர். அவர் பாராளுமன்ற தேர்தலில் பாஜக வேட்பாளர் பட்டியலில் இடம்பெறுவார். மேற்கு வங்காளத்தில் போட்டியிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply