டெல்லியில் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி அரசு பதவி விலகியதைதொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம் என மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜன லோக்பால் மசோதா டெல்லி சட்ட சபையில் நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து கெஜ்ரிவால் தமதுபதவியை ராஜினாமா செய்தார். மேலும் சட்ட சபையை கலைக்குமாறு அவர் துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரை செய்தார். இந்நிலையில் அடுத்த கட்டநடவடிக்கை பற்றி துணைநிலை ஆளுநர் தன் அறிக்கையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு இன்று அனுப்பியுள்ளார்.

அதில் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்தலாம் என கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி சட்ட சபைக்கு லோக் சபா தேர்தலுடன் சட்ட சபைக்கு தேர்தல் நடத்தக்கூடும் எனத் தெரிகிறது.

Leave a Reply