ஆம் ஆத்மி ஒரு நக்சல்கட்சி , அவர்களுக்கென தனிக்கொள்கை எதுவும் இல்லை என பாஜக., தலைவர் சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.

ஜெய்பூரில் நடைபெற்ற இந்தியபொருளாதாரம் தற்போது சந்தித்துவரும் நெருக்கடிகள் குறித்து செய்தியாளர்களிடம் உரையாற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது . கெஜ்ரிவால் நக்சல் விவகாரங்கள் குறித்து ஸ்வராஜ் என்ற புத்தகம் ஒன்றை எழுதியிருந்தார்; அதில் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளபடி ஒவ்வொரு காலனிக்கும் ஒருசபா அமைக்க வேண்டும்; அதன்கீழ் அரசு நிர்வாகம் இயங்க வேண்டும் என விரும்புகிறார்; இது சட்டத்திற்கு புறம்பானது; ஆம் ஆத்மியை பொறுத்த வரை இந்தியா ஒரேநாடு அல்ல; இங்கு வாழ விரும்பாதவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்பதே அவர்களின் கொள்கை. இவ்வாறு சுப்ரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply