இமாச்சல பிரதேச மாநிலம் சுஜன்பூரில் நடந்த பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி நாட்டில் நடந்த அனைத்து ஊழல்களுக்கும் காங்கிரஸ் கட்சியே காரணம் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது , 100 நாளில் பண வீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என்று கூறியகாங்கிரஸ் அரசு அதை நிறைவேற்ற தவறி விட்டது.

கடந்த 60 வருடங்களில் நாட்டின் வளர்ச்சிக்கு காங்கிரஸ்கட்சி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்தால் 60 மாதங்களில் நாட்டில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும்
. காங்கிரஸ் கட்சி அரசியலை வியாபாரமாக்கிவிட்டது. அதை அவர்கள் தொழிலாகவே பார்க்கிறார்கள். ஆனால் நாங்கள் அரசியலை மக்களுக்கு சேவைசெய்யும் வழியாக பார்க்கிறோம் .

மக்களின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்து விட்டதால் ஆட்சியில் நீடிக்கும் தார்மீக உரிமையையும் இயல்பாகவே அக்கட்சி இழந்து விட்டது. வேலை வாய்ப்பு தேடி வீடுதோறும் மக்கள் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.

இம்மாநில மக்களின் அன்பை நான் என்றும் மறக்க மாட்டேன். பாசத்தையும், மரியாதையையும் இந்தமாநிலம் எனக்கு தந்துள்ளது. எனக்கு வாய்ப்பு கொடுத்தால் இங்குள்ள மக்களுக்கு என்னால் இயன்றதை செய்வேன். வரும் பொதுத் தேர்தலின் நோக்கம் மக்களுக்கு தேவையான உணவு, வீடு மற்றும் முதியவர்களுக்கு சுகாதாரவசதிகள் ஆகியவற்றை வழங்குவதே என்று அவர் கூறினார்.

Leave a Reply