டெல்லியில் ஆம் ஆத்மிக்கு எதிராக பாஜக இன்று மாபெரும் போராட்டத்தை நடத்துகிறது. இது தொடர்பாக பாஜக.,வின் டெல்லி மாநிலத் தலைவர் விஜய்கோயல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆம் ஆத்மியின் இரட்டைவேடம் மற்றும் மாவோயிஸ்ட் கொள்கைகளுக்கு எதிரான

பிரச்சாரத்தை தொடங்கவுள்ளதாக கூறியுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற்ற 28 தொகுதிகளிலும் போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த கட்சி அறிவித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படவில்லை என்றும் கோயல் குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Reply