மத்தியில் பாஜக. ஆட்சி அமைந்தால் கங்கை ஆற்றை சீர்குலைக்கும் மத்திய- மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் ரத்துசெய்யப்படும் என பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

‘கங்கையை காத்து தேசத்தை காப்போம்’ என்ற பிரசார இயக்கத்தில் பங்கேற்பதற்காக உ.பி., மாநிலத்தில் உள்ள உன்னவ் நகருக்கு நேற்றுவந்திருந்த சுஷ்மா சுவராஜ் கூறுகையில், ‘சமீபத்தில் உத்தர காண்டில் நிகழ்ந்த இயற்கை பேரிடரும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளும் சுற்றுச்சூழலுடன் மனிதர்கள் இணங்கி வாழா விட்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும்? என்பதை நமக்கு தெளிவுபடுத்தியுள்ளன.

மத்தியில் பாஜக. ஆட்சி அமைந்தால் கங்கை ஆற்றை சீர்குலைக்கும் மத்திய- மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் ரத்துசெய்யப்படும்’ என்று உறுதிபட தெரிவித்தார்.

Leave a Reply