தேர்தல்நேரத்தில் ரஜினி காந்த் மோடிக்கு ஆதரவளிப்பார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த 1996ம் வருடம் நடந்த தேர்தலில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பாஜகவுக்கு ஆதரவுதெரிவித்தார். இந்நிலையில் இந்த தேர்தலில் ரஜினியின் ஆதரவு பா.ஜ.க.,வுக்கு கிடைக்கும் என பேச்சு அடிபடுகிறது.

இதுகுறித்து பா.ஜ.க., மூத்த தலைவர் இல. கணேசன் கூறுகையில், ரஜினி காந்த் அனைவருக்கும் பொதுவான மனிதர். அவரை பிரச்சனைக்கு உட்படுத்த நான் விரும்ப வில்லை. ஆனால் தேர்தல்நேரத்தில் அவர் மோடிக்கு ஆதரவு அளிப்பார் என்று நம்புகிறோம். ரஜினிக்கு நாட்டுநலனில் அக்கறை உண்டு. அதனால் தேர்தல் நேரத்தில் இந்தமுடிவை எடுப்பார். இதுகுறித்து நாங்கள் அவரை இதுவரை அணுக வில்லை. அதற்கான நேரம் இதுவல்ல. நேரம் வரும் போது அவரிடம் ஆதரவுகேட்போம் என்றார்.

Leave a Reply