பா.ஜ,க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை டீ விற்றவர் என்று காங்கிரசார் விமர்சனம் செய்தனர். அதற்கு எதிர்ப்புதெரிவிக்கும் வகையில் நரேந்திரமோடி பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களை இணைத்து ''நமோ டீ ஸ்டால்'' அமைத்தனர். இதில் இலவசமாக டீ வழங்கபட்டது.

இப்போது பா.ஜ.க மீனவர் அணியினர் மோடிபெயரில் ''நமோ மீன் கடை'' அமைக்க முடிவுசெய்துள்ளனர். இதில் மலிவுவிலையில் மீன்கள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நமோ மீன் கடை மலிவுவிலையில் மீன்களை விற்கும் நடமாடும் மீன்கடையாகும். முதல் கட்டமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட 5 மாவட்டங்களில் தொடங்கப்படுகிறது.

இந்த நடமாடும் நமோ மீன்கடையில் மோடி படம் வைக்கப்பட்டு இருக்கும். மக்களிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து நமோ மலிவுவிலை மீன்கடைகளை மற்ற மாவட்டங்களில் திறக்க திட்டமிட்டுள்ளனர்.

முதல் 'நமோ மீன்கடை' வருகிற 25ந் தேதி சென்னை கலங்கரை விளக்கம் பகுதியில் திறக்கப்படுகிறது. பா.ஜ.க.,வின் மூத்த தலைவர் இல.கணேசன் இதை திறந்து வைக்கிறார்.

முதல் நாளில் 200 பேருக்கு, நமோ மீன் கடையில் இலவசமாக மீன் வழங்கப்படுகிறது. பின்னர், மலிவுவிலையில் மீன்கள் விற்கப்படும். அடுத்த 15 நாட்களில் மேலும் 4 மாவட்டங்களில் இந்தகடை திறக்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க மீனவர் அணி செய்துள்ளது.

Leave a Reply