“என்னுடைய பேச்சுக்கு சேவைவரி விதித்து நாட்டின் வருமானத்தை பெருக்க மத்திய நிதித் துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடினமாக உழைத்துவருகிறார். என்னுடைய பேச்சு நாட்டிற்கு பயனளிப்பது எனக்கு சந்தோஷத்தை தருகிறது ” என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி கருத்து தெரிவித்துள்ளார் .

குஜராத் தலைநகர் காந்தி நகரில் உள்ள சர்வதேச நிதி “டெக்சிட்டி’யில் பொருளாதார வளர்ச்சிக்கு நிதிச்சேவைகள் முக்கியம்’ என்ற தலைப்பில் புதன் கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் நரேந்திரமோடி பேசியதாவது:

மத்திய நிதித்துறை அமைச்சர் கடினமாக உழைப்பதாகக் கூறுகிறார். அவர் அப்படி என்ன தான் உழைக்கிறார் என்பதுபற்றி எனக்கு செவ்வாய்க்கிழமை மாலை தகவல் கொடுக்கப்பட்டது. நாட்டின் வருமானத்தை பெருக்க என்னுடைய பேச்சுக்கு சேவைவரி விதித்தது தான் அவருடைய கடின உழைப்புக்கு அடையாளம். வேலை வாய்ப்பை உருவாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தவேண்டும் என்றார் மோடி.

Leave a Reply