நாடாளுமன்றத்தில் தெலங்கானா மசோதா நிறைவேற காங்கிரஸ்சுடன் ரகசியக் கூட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் புகாரை பாஜக மறுத்துள்ளது.

தெலங்கானா மசோதா மாநிலங்களவையில் வியாழக் கிழமை நிறைவேற்றப்பட்ட பிறகு அவைக்குவெளியே செய்தியாளர்களிடம் பேசிய திரிணமூல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சி உறுப்பினர்கள், காங்கிரஸ் – பா.ஜ.க ரகசியக்கூட்டு ஏற்படுத்திக்கொண்டதாகக் குற்றம்சாட்டினர்.

இந்த குற்றச்சாட்டை பா.ஜ.க மூத்த தலைவர் வெங்கய்யநாயுடு முழுமையாக நிராகரித்தார். மேலும்,”ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதலாவது ஆட்சிக்கு இடதுசாரிகள் ஆதரவுதந்தனர் .

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 2வதுமுறை ஆட்சியில் திரிணமூல் காங்கிரஸார் ஆதரவு தந்தனர். ஆகையால், காங்கிரஸ்கட்சி செய்த ஊழல்களில் இந்த 2 கட்சிகளுக்கும் பங்குள்ளது’ என்றார்.

Leave a Reply