இலவசங்களை அளிக்கும் அரசு , அத்தியாவசியத் தேவைகளின் விலைகளை ஒன்றுக்கு மூன்றாக உயர்த்தும் அரசு, சமுதாயத்தின் நீண்ட கால முன்னேற்றத்தைப பற்றிக் கவலைப்படாத அரசு,

மோசமான சாலைகள், அழிந்து கொண்டிருக்கும் சிறு தொழில்கள் , விவசாயம், மின்வெட்டு இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப் படாமல் தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்பு ஒன்றிரண்டு சாலைகளைச் செப்பனிடுவது, ஏதாவது சலுகைகளை அறிவிப்பது போன்றவற்றைச் செய்யும் அரசு – அந்த அரசு மக்களைப் பற்றி மிக மிக மலிவாக எண்ணுகிறது என்பதைத் தான் காட்டுகிறது.

அப்படிப்பட்ட அரசால் மக்களின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படாது .

இதற்கு மாறாக குஜராத் முதலமைச்சரும், பா ஜ கவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி அவர்களின் சிந்தனை எவ்வாறு உள்ளது என்பதைப் பார்ப்போம் .

மோடி கூறுகிறார்: ' வோட்டுக்காக இலவசங்களை அளிப்பது தவறாகும். ஆனால் ஒருவர் செய்யும் தொழிலை மேலும் சிறந்த முறையில் செய்ய உதவும் ,மேலும் வருமானத்தை ஈட்டத் துணை புரியும் ஒரு கருவியை அவருக்கு இலவமாகக் கொடுப்பது தவறல்ல.

உதாரணமாக வீடு வீடாக நடந்து சென்று புடவைகளை விற்கும் ஒருவர் ஒரு நாளைக்கு 50 புடவைகள் விற்கிறார் என்று வைத்துக் கொள்வோம் .அவருக்கு ஒரு சைக்கிள் கொடுத்தால் இப்போது 50 புடவைகளுக்குப் பதிலாக 200 புடவைகளை அவர் விற்கலாம். அதனால் அவரது வேலையும் எளிதாகும் , வருமானமும் கூடும் .

நாம் செய்யும் உதவி இவ்வாறே இருக்க வேண்டும்'

இது எவ்வளவு சிறப்பான, ஆக்க பூர்வமான சிந்தனை!

ஆகவே மோடியைப் போன்ற தலைவர்களின் வழிகாட்டுதலிலேயே நாமும் நமது எதிர்கால சந்ததியினரும் முன்னேற்றத்தின் உச்சத்தை எட்ட முடியும்.

நன்றி ஸ்ரீதரன்

Leave a Reply