தெலங்கானா உருவாக்கம் நிறைவேறியுள்ள நிலையில், அரசியல் நோக்கர்களும் ஊடகத் துறையினரும் தற்போது, அரசியல்ரீதியான லாபம் யாருக்கு என்பது குறித்தும், இந்த முடிவினால் விளையும் பயன்கள் குறித்தும், ஆய்வைத்தொடங்கி விட்டனர். மத்திய அமைச்சரவையின் இந்தமுடிவை குறுகிய நோக்கத்தில் பார்ப்பது சரியாக இருக்காது. தெலங்கானா அந்தப் பகுதி மக்களின் முறையான கோரிக்கையாகும். இன்னும் தாமதமாகியிருந்தால் மக்களின்

உணர்வுகள் மேலோங்கி நிலையற்றதன்மையை உருவாக்கியிருக்கும். பின்னர் அப்பகுதி மக்களின் உணர்வுகளை சரிப்படுத்த முடியாமலே போயிருக்கும்.

காங்கிரஸ் சிலவருடங்களாக இப்பிரச்னையை கையாண்ட விதம் விஷயத்தை மேலும் தீவிரமாக்கி விட்டது. சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களை பிரிக்கும்போது பின்பற்றியது போல் மக்களிடையே நல்ல அபிப்பிராயங்களை ஏற்படுத்தாமல், காங்கிரஸின் இரு கோஷ்டியினரும் சண்டையிட்டுக்கொண்டு மாநிலத்தில் வாழும் இருபகுதியினரிடையே மோதல் உண்டாக்கிவிட்டனர். மாநிலம் முழுவதும் அரசாங்கம் ஸ்தம்பித்துவிட்டது. ஆந்திரம் வணிகரீதியாக இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் ஒன்று. இச்சிக்கலை தீர்க்க நாம், அரசியல் சந்தர்ப்பவாதம் வேண்டுமா அல்லது ராஜதந்திரம் வேண்டுமா என தீர்மானிக்கவேண்டும்.

ஆந்திர பாஜகவினர் 30 வருடங்களாக தெலங்கானாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 2006-ல் பாஜகவின் மத்திய அமைப்பும் இந்த கோரிக்கைக்கு ஒப்புதல் தெரிவித்துவிட்டது. ஆனாலும் பாஜக இரு கருத்துக்களை தொடர்ந்து சொல்லிவந்தது. முதலாவது, தனியாக தெலங்கானா எனும் மாநிலம் பிரிக்கப்படவேண்டும். இரண்டாவது, சீமாந்த்ரா பகுதிக்கு நியாயமான நீதி வழங்கப்படவேண்டும், ஏனென்றால், மாநிலம் பிரிக்கப்பட்டால் பொருளாதார ரீதியாக அதிகம் பாதிக்கப்படப்போவது சீமாந்த்ராத்தான். இதில் அதிக ஈடுபாடுடையவர்களாக காட்டிக்கொள்பவர்கள் உடனடி ஆதாயத்தைதான் எதிர்பார்க்கிறார்கள். மேற்கண்ட எங்கள் இரு கருத்துக்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடானது அல்ல. தெலங்கானா மாநிலம் ஏற்படுத்தப்பட்டதற்கும், அதனுள் இருக்கும் ஹைதராபாத் தங்களுக்கானது என்பதிலும் தெலங்கானா மக்கள்  மகிழ்ச்சியிலுள்ளனர். இரு அவைகளிலும், மசோதா தோற்பதும் ஜெயிப்பதும் பாஜகவின் கையிலிருந்தது. . அதனால் எங்கள் நீண்டகால கோரிக்கையான தெலங்கானாவிற்கு ஆதரவான நிலையை எடுத்தோம்.

தற்போது இரு சவால்கள் உள்ளன. சீமாந்த்ராவின் விருப்பங்களை நிறைவேற்றுவது எப்படி? தெலங்கானா உருவாக்கத்தில் தவறிழைத்த அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவது எப்படி? இப்படி சுட்டிக்காட்டும்போது, ஒன்றை குறிப்பிடவேண்டியது கண்காணிக்கும் பொறுப்பிலுள்ள எதிர்க்கட்சியான எங்கள் கடமையாகும்,

அதாவது, ஹைதராபாத்தின் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் அதிகாரத்தை அமைச்சர்களிடமிருந்து மாற்றி கவர்னருக்கு அதிகாரமளிப்பது. தேவையெனில் சட்டத்தையும் திருத்தலாம். இச்சிக்கலில் அரசின் அரைமனதான ஏற்றுக்கொள்ளமுடியாத நடவடிக்கைகளின்போதே, எங்கள் நிலை சந்தேகமற தெளிவாக்கப்பட்டுவிட்டது, மேலும், சீமாந்த்ராவின் பொருளாதார விருப்பங்களை பாதுக்காக்கும் அரசின் உறுதியான பொறுப்பை ஏற்க வைக்கும் பொறுப்பு எதிர்க்கட்சியுடையதாகும். இப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர நாங்கள் எல்லாவித பாராளுமன்ற உபாயங்களையும் கையாண்டோம். கட்சி என்ற வகையில், எண்ணிக்கை பலம் எங்களுக்கு கூடுதல் வசதியை தந்தது. ஆகையால் ராஜ்ய சபையில் நாங்கள், சீமாந்த்ராவிற்கு அடுத்த 5 வருடங்களுக்கு சிறப்பு அந்தஸ்து, சீமாந்த்ராவில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வரிச்சலுகைகள், ராயலசீமா மற்றும் வட கடலோர ஆந்திர மாவட்டங்களுக்கு பின் தங்கிய பகுதிக்கான சலுகைகள் போன்றவைகளை பெற்றுத்தந்தோம். தேசிய திட்டமாக அறிவிக்கப்பட்ட போலாவரம், தற்போது, மறுவாழ்வு மற்றும் குடிபெயர்வு வசதிகளைப்பெறும். 14வது நிதிக்கமிஷன் அமைக்கப்பட்டு தீர்மானிக்கப்படும்வரை, சீமாந்த்ரவின் வளக்குறைவால் ஏற்படும் நிதிப்பற்றாக்குறைக்கு மத்திய அரசு தேவையான உதவியளிக்கும், இச்சலுகைகள், பெருமளவு நியாயமானவையாகவும், சீமாந்த்ரா பகுதி மக்களின் விருப்பங்களை ஈடேற்றுவதாகவும் இருக்கும்.

மேற்கொண்டு, சீமாந்த்ராவிற்கு புதிய தலைநகரம் அமைக்க மத்திய அரசின் உதவி, போன்ற தேவைகள் எழுமெனில், அத்தகைய விருப்பங்களை நிறைவேற்றுவதிலும் பாஜக முக்கிய  பங்களிக்கும். ஒன்றுபட்ட ஆந்திரத்தில் பாஜக ஒரு சிறிய கட்சியே ஆயினும், பொறுப்புடன் மிகவும் சரிவர தன் கடமையை செய்துள்ளதும், முன்னாள் ஆந்திரத்தின் இரு பகுதிகளுக்கும் இடையே நியாயமாக பணியாற்றியதும், அரசியல் சூறாவளியால் எழுந்த தூசி அடங்கியபின்னர், மக்களுக்கு தெரிய வரும்.

நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்

Leave a Reply