ஊழல் குற்றச்சாட்டு களாலும், நிர்வாக சீர்கேட்டினாலும் காங்கிரஸ்கட்சி வரலாறுகாணாத தோல்வியைத் தழுவும் என பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

மேலும், மக்களவைத்தேர்தலில் முன் எப்போதும் இல்லாத அளவில் பா.ஜ.க அதிக அளவில் ஓட்டுகள்பெற்று தனிப்பெரும்பான்மை பெறும் . பாஜக.,வுக்கு இப்போது எழுந்துள்ள அளவு ஆதரவு இதற்குமுன்பு மக்கள் மத்தியில் நான் கண்டது இல்லை.

நாடு சுதந்திரம்பெற்ற காலம் முதல் இந்திய அரசியலில் முக்கியபங்கு வகித்துவரும் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் மிகவும்சொற்ப அளவிலேயே வாக்குகள் கிடைக்கும், மக்களவைத் தேர்தலுக்குபின்னர் தொங்கு நாடாளுமன்றம் உருவாக வாய்ப்பில்லை என தெரிவித்தார்.

Leave a Reply