வரும் நாடாளுமன்றதேர்தலில் பாஜக வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் பாஜக தலித்பிரிவு சார்பில் சமூக நீதிமாநாடு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம், தே.மு.தி.க., பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுவருகிறது , இன்னும் சில நாட்களில் தமிழகத்தில் பாரதிய ஜனதா தலைமையிலான வலுவானகூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply