தமிழகத்திலிருந்து பா.ஜ.க சார்பில் 15 எம்பி.க்களையாவது தேர்வுசெய்து அனுப்புங்கள் காங்கிரஸ் இல்லா தமிழகம் என்ற கோஷத்தை, காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற கோஷமாக மாற்றவேண்டும் என பாஜக எஸ்சி அணி அகில இந்தியத் தலைவர் சஞ்சய் பாஸ்வான் கேட்டுக்கொண்டார்.

மதுரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பா.ஜ.க., தாமரையின் சமூக நீதி மாநாட்டில் அவர் மேலும் பேசியது:

நாட்டை சங்கடத்தில் ஆழ்த்திய காங்கிரஸ்கட்சியை தமிழகத்தில் 30 ஆண்டுகளுக்கு முன்பே துடைத்தெறிந்து விட்டீர்கள். காங்கிரஸ் இல்லா தமிழகம் என்ற கோஷத்தை, காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற கோஷமாக மாற்றவேண்டும். தமிழகத்திலிருந்து பா.ஜ.க.,வுக்கு 15 எம்.பி.க்களை யாவது தேர்வுசெய்து அனுப்பினால் அது சாத்தியமாகும்.

சமீபத்தில் நடைபெற்ற 4 மாநில தேர்தல்களில் 89 தனித்தொகுதிகளில் 70 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்கள்மத்தியில் பா.ஜ.க.,வுக்கு செல்வாக்கு அதிகரித்துவருகிறது. நாடு முழுவதும் காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளால் தாழ்த்தப்பட்ட மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். அடுத்த 10 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட, மலை வாழ் மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்கு பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி உறுதியளித்துள்ளார். எனவே மோடியை பிரதமராக்க தாழ்த்தப்பட்ட மக்கள் அணி திரள வேண்டும் என்றார்.

Leave a Reply