அசாம் மாநிலம் ராம்நகர் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல்பிரசார பொதுக் கூட்டத்தில் குஜராத் முதல்–மந்திரியும், பா.ஜ.க பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி கலந்து கொண்டார்.

பொதுக்கூட்டத்தில் பேசிய நரேந்திரமோடி; வங்காள தேசத்தில் இருந்து இந்தியாவிற்கு இடம் பெயறும் இந்துக்களுக்கு இடமளிக்கப்படும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் தடுப்பு முகாம்களில் அவர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும்.

“பிறநாடுகளில் துன்புறுத்தப்படும் மற்றும் பாதிக்கப்படும் இந்துக்களின் நலனுக்கு பாஜக பொறுப்பு. அவர்கள் வேறு எங்கேசெல்வார்கள். இந்தியா ஒன்றே அவர்களுக்கான இடம். எங்களுடையை அரசு அவர்களுக்கு தொல்லைகொடுக்காது. அவர்களுக்கு நாங்கள் நாட்டில் தங்க இடம் தருவோம்.” மத்தியில் பாஜ ஆட்சிக்கு வந்ததும், இந்த முகாம்கள் கலைக்கப்படும்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவர்கள் குடியமர்த்தப்படுவார்கள். அதே நேரம், வங்கதேசத்தில் இருந்து ஓட்டு வங்கிக்காக குறிப்பிட்ட ஒருகட்சியால் அழைத்து வரப்பட்டுள்ள ஊடுருவல் காரர்கள் வெளியேற்றப்பட வேண்டும். பாகிஸ்தானில் இருந்து குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு இந்துக்கள் வந்தனர். அவர்களுக்காக அப்போதைய பிரதமர் வாஜ்பாய் சிறப்பு திட்டங்களை வகுத்து, பல்வேறு மாநிலங்களில் அவர்களை குடியமர்த்தினார்.

அசாமுக்கு அருகே வங்கதேசம் உள்ளது. குஜராத்துக்கு அருகே பாகிஸ்தான் உள்ளது . வங்கதேசத்தால் அசாம் சித்ரவதை செய்யப்படுகிறது. அதேநேரம், என்னால் பாகிஸ்தான் கவலைப்படுகிறது. மத்தியில் நாங்கள் ஆட்சிக்குவந்ததும், வங்கதேசத்தால் அசாம் அனுபவிக்கும் பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்படும். இவ்வாறு மோடி பேசினார்.

தன்னுடைய வாக்கு வங்கி அரசியலை நடத்திவரும் அசாம்மாநில காங்கிரஸ் அரசு தடுப்புமுகாம்களில் உள்ள இந்துக்களின் அடிப்படை உரிமைகளை மீறிவருகிறது என்று மோடி குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a Reply