சிஐஏ உட்பட வெளிநாடுகளின் உளவு நிறுவனங்களுடன் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்பிருப்பதாக பா.ஜ.க குற்றம் சுமத்தியுள்ளது. டெல்லி பாஜக தலைவர் ஹர்ஷ வர்தன் இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானிக்கும், பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடிக்கும் தொடர்பு இருப்பதாகவும் இது குறித்து அவர் விளக்கமளிக்கவேண்டும் என்றும் கெஜ்ரிவால் கடந்த ஞாயிறு அன்று வலியுறுத்தி இருந்தார். இதற்கு பதிலடிகொடுக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள ஹர்ஷ் வர்தன், வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து கெஜ்ரிவாலும், மனிஷ் சிசோடியாவும் கோடிகணக்கில் பணம் பெற்றுள்ளனர்.

நாட்டில் அரசியல்நிச்சயமற்ற தன்மையை உருவாக்க கெஜ்ரிவால் இந்தநிதியை பெற்றுள்ளார். அரசு அமைத்த 49 நாட்களில் பதவி விலகி டெல்லிமக்களுக்கு கெஜ்ரிவால் துரோகம் செய்துவிட்டார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு கெஜ்ரிவால் மறை முகமாக உதவியுள்ளார். காங்கிரஸ் தலைவர்கள்மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிய கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்த போது அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் ஹர்ஷ வர்தன் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply