அனைத்திந்திய எஸ்.சி/எஸ்.டி அமைப்புகளின் கூட்டமைப்பின் தலைவரும் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரியுமான உதித்ராஜ், பா.ஜ.க தலைவர் ராஜ்நாத்சிங் முன்னிலையில் கட்சியில் இணைந்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் உதித்ராஜ் பேசுகையில், “மூன்று முக்கிய பிரச்னைகளில் பா.ஜ.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன். ஐ.ஆர்.எஸ் பணியில் இளநிலை அலுவலராகப் பணி புரிந்தவர் ஆம்ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால். உத்தர பிரதேச மாநிலத்தில் தலித்துகளுக்கு துரோகம் இழைத்தவர் பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி. இது போன்ற சூழலில், வரும் மக்களவை தேர்தலில் ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சிகளுக்கு எதிராக உத்தரபிரதேச மாநிலத்திலும் பிற மாநிலங்களிலும் பிரசாரம் மேற்கொள்வேன்’ என்றார்.

உதித் ராஜ் உத்தர பிரதேச மாநிலம் ராம் நகரில் பிறந்தவர் . உயர்கல்வி பயின்று இந்தியன் ரெவின்யூ சர்வீஸ் (ஐஆர்எஸ்) பணியில் 1988இல் சேர்ந்தார். இதற்கு முன்னர், அனைத்திந்திய எஸ்சி/எஸ்டி அமைப்புகளின் கூட்டமைப்பை 1997ஆம் ஆண்டுநிறுவி அதன் தலைவரானார். புத்தா கிளப்பை 1996-ஆம் ஆண்டு உருவாக்கினார். எஸ்சி, எஸ்டி., ஓபிசி. பிரிவினரின் இட ஒதுக்கீட்டு பிரச்னைகளுக்காக போராடிவருகிறார்.

Leave a Reply