தமிழ்நாடு கிறிஸ்தவபோதகர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது. மாநாட்டில் நரேந்திரமோடி பிரதமராக கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

சென்னை வேப்பேரியில் உள்ள ஒரு தனியார்பள்ளியில் தமிழ்நாடு கிறிஸ்தவ போதகர்கள் மாநாடு நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு பாஜக. வழக்கறிஞர் அணி வட சென்னை மாவட்ட துணை தலைவர் டி.சைமன் தலைமை தாங்கினார். மாநிலசெயலாளர் கே.டி.ராகவன், சென்னை மாவட்ட தலைவர்கள் ஜெய் சங்கர், காளிதாஸ், செயலாளர் ஜி.கே.எஸ். ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பாஜக. மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார் :– காங்கிரஸ்கட்சி சிறுபான்மை மக்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கிறோம் என்று கூறி தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது. ஒற்றுமையை வளர்க்க பாஜக. பாடுபட்டு வருகிறது. மதத்தை பார்க்காமல் இந்தியர் என்ற ஒற்றுமை உணர்வோடு அனைவரும் பாஜக.வை ஆதரிக்கவேண்டும்.

இந்தியா வல்லரசாக, மத்தியில் பாஜக. அரசு அமையவேண்டும். உலக நாடுகளுக்கு தலைமை ஏற்கும் நாடாக இந்தியாமாறும் என்றார் வானதி சீனிவாசன்.

மாநாட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் சுமார் 00–க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ போதகர்கள் கலந்து கொண்டனர். பாதிரியார் ரகுபிலமோன் தலைமையில், கிறிஸ்தவ போதகர்கள், 'நாடுவல்லரசாக குஜராத் முதல்–மந்திரியும், பாஜக. பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி இந்திய நாட்டின் பிரதமராக வரவேண்டும் என்று' சிறப்பு பிரார்த்தனை செய்தனர். நிகழ்ச்சியை போதகர் லியோ நெல்சன் தொகுத்து வழங்கினார்.

Tags:

Leave a Reply