மக்களவைதேர்தலை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் மோடி பெயரில் ரதயாத்திரையை ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் வசுந்தர ராஜே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இது குறித்து செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “நரேந்திரமோடி, பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் மற்றும் இப்பகுதியில் போட்டியிடும் 25 வேட்பாளர்கள் ஆகியோரின் படங்கள் இந்த வாகனங்களில் வைத்து பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.

இவ்வாகனங்களில் “மோடியை பிரதமராக்குங்கள் என கூறும் ஒலிப்பதிவு இடம் பெறும்”. மேலும் இவ்வாகனங்களில் மோடியின் சிறப்புரைகள் தினமும் மாலை 7 மணிமுதல் இரவு 9 வரை ஒலி பரப்பப்படும். இதுமட்டும் அல்லாது எங்களது கட்சியின் நோக்கங்கள் குறித்த சிடி. மக்களிடையே வழங்கப்படும்.

இந்த சிடி.யில் காங்கிரஸ் கட்சியின் ஊழல்கள் குறித்த பாஜக தலைவர்களின் விமர்சனங்கள் இடம் பெற்றிருக்கும் என்று தெரிவித்தார்.

Leave a Reply