பாஜக மத்தியில் ஆட்சிக்குவந்தால், இலங்கையின் ராஜபட்ச அராஜகத்துக்கு முடிவுகட்டுவோம் என தமிழக பா.ஜ.க தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் .

திருச்செந்தூரில் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சித் தலைவர்களின் வாரிசுகளுக்கு வரும்தேர்தலில் சீட் தருவதை தாம் ஆதரிக்கவில்லை என கூறுவது வேடிக்கையாக இருக்கிறது . அவர், தன்னுடைய பின்புலம் தெரியாமல் பேசுவது கேலியாக உள்ளது

பாஜக., மதவாதக்கட்சி என்பதால் கூட்டணி இல்லை என்று அதிமுகவும், திமுகவும் கூறுகின்றனவே என்று செய்தியாளர்கள் கேட்டபோது, தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் ஏற்கெனவே பா.ஜ.க.,வுடன் கூட்டணி வைத்தவை தான்; பதவிசுகம் அனுபவித்தவை தான் என்றார்.

தே.மு.தி.க உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நீடித்துக்கொண்டே இருக்கிறதே, இன்னும் எவ்வளவு நாள் இப்படி இழுப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது, யாருக்காகவும் பா.ஜ.க காத்திருக்காது என்றார் .

மேலும் தமிழக திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, தற்போதைக்கு தே.மு.தி.க.,வுடன் மட்டுமே கூட்டணிஅமைய வாய்ப்புள்ளது என்று கூறிய பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Reply