காங்கிரஸ் அரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நாட்டை இருண்டகாலத்திற்கு தள்ளி விட்டது,” என்று பாஜக., பிரதமர் வேட்பாளர், நரேந்திரமோடி குற்றம் சுமத்தியுள்ளார்.

மத்திய பிரதேசத்தில், முதல்வர், சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையிலான, பாஜக., ஆட்சி நடந்து வருகிறது . அங்கு, பகவான்புரா என்ற இடத்தில், 1,000 ஏக்கர் நிலத்தில், 130 மெகாவாட் மின்உற்பத்தி திறனுடைய, சூரிய சக்தி மின்உற்பத்தி திட்டத்தை, குஜராத் முதல்வர்,நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

பின்னர் அவர் பேசியதாவது பேசியதாவது: மத்தியில் ஆளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, கடந்த, 10 ஆண்டுகளில், 20 ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறனுடைய பலதிட்டங்களை முடக்கியுள்ளன. இதனால், நாடு, இருண்டகாலத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளால், ரூபாயின் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது. ஏராளமான இயற்கைவளங்கள் வீணடிக்கப் பட்டுள்ளன. நாட்டில், பாஜக.,வுக்கு சாதகமான அலை வீசுகிறது. மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். என்றார்

Leave a Reply