காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியை விட, பாஜக. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு ஆதரவு அதிகமாக உள்ளது என்று அமெரிக்க நிறுவனம் கருத்துகணிப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு பியூரிசர்ச் சென்டர் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. சமூகமாற்றங்கள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அவ்வப்போது கருத்துகணிப்பு நடத்தி இந்தமையம் தகவல் வெளியிட்டுவருகிறது .

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் மேமாதம் நடைபெற உள்ளது. இது குறித்து இந்தியாவில் பல மாநிலங்களில் பியூ ஆய்வுமையம் 2,464 பேரிடம் கருத்துகணிப்பு நடத்தி உள்ளது. கடந்த டிசம்பர் 7ம் தேதி முதல் ஜனவரி 12ம் தேதிவரை நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்த விவரங்கள் பியூ மையம் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தியை விட, பாஜக. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடியை அதிகமானோர் விரும்புகின்றனர்.

அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் மோடியை ஆதரிக்கின்றனர். காங்கிரசுக்கு 19 சதவீதத்துக்கும் குறைவாகவே ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்தியாவில் அடுத்து பாஜக. ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் 10 பேரில் 6க்கும் மேற்பட்டவர்கள், அடுத்து பாஜக. ஆட்சி அமைக்கவேண்டும் என்று விரும்புகின்றனர். மேலும் கிராமங்கள், நகரங்கள் என்ற வித்தியாசம், வயதுவித்தியாசம் இல்லாமல், காங்கிரசைவிட பாஜக. ஆட்சி அமைய விரும்புகின்றனர் என்று பியூமையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply