பிகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரியும் , அதை மறுத்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும், அந்த மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் வியாழக் கிழமை ரயில்மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான இடங்களில் ரயில்சேவை பாதிக்கப்பட்டது.

பாட்னா நகரின் சசிவாலா ரயில்நிறுத்தத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் பா.ஜ.க.,வைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, சட்டப்பேரவை எதிர்க் கட்சித் தலைவர் நந்த் கிஷோர் யாதவ் மற்றும் மாநில தலைவர் மங்கல் பாண்டே உள்பட கட்சித் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

சுஷில் குமார் மோடி செய்தியாளர்களிடம் கூறுகையில், “”பின் தங்கிய , ஏழ்மை நிலையிலுள்ள மாநிலமான பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் மத்திய அரசு பாகுபாடு காட்டிவருகிறது. மாநில வளர்ச்சியை ஊக்குவிக்க சிறப்புநிதி ஒதுக்க தவறிவிட்டது. பா.ஜ.க ஆட்சிக்குவந்தால், பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாகவும், சிறப்புநிதி ஒதுக்குவதாகவும் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஏற்கெனவே உறுதி அளித்துள்ளார்” என்றார்.

Leave a Reply