அவசர நிலைப் பிரகடனத்தின் போது சந்தித்த தோல்வியையே காங்கிரஸ்கட்சி தற்போது மீண்டும் சந்திக்கும் என பாஜக மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் ஆமதாபாதில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பா.ஜ.க வியாழக்கிழமை வெளியிட்டுள்ள மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களின் முதல்பட்டியலில் எனது பெயர் இடம் பெறவில்லை. காந்தி நகரில் நடைபெறவுள்ள ஊழல் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்துள்ளேன். காந்தி நகர் தொகுதியில் போட்டியிட ஆர்வமாக உள்ளேன். ஆனால், அது பற்றி கட்சி தான் இறுதி முடிவெடுக்கும்.

அவசர நிலைப் பிரகடனத்தின் போது சந்தித்த தோல்வியையே காங்கிரஸ் கட்சி தற்போது மீண்டும் சந்திக்கும். அந்தக்கட்சி 3 இலக்க எண்ணை எட்டாமல் போனால் ஆச்சரியப்பட மாட்டேன் என்று நான் ஏற்கெனவே தெரிவித்துள்ளேன் என்றார் அத்வானி.

Leave a Reply