தமிழக பாஜக. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:

பாஜக முன்னாள் அகில பாரத தலைவர் பங்காரு லட்சுமணன் காலமான செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களை முன்னேற்ற தனிப் பெரும் தலைவராக உருவாகிய பங்காரு லட்சுமணன் பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு ஆற்றிய பங்கு அளப்பரியது.

பாராளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும், அகில பாரத பாஜக. தலைவராகவும் இருந்த பங்காரு லட்சுமணன், தமிழக பா.ஜ.க.வின் வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். மேலும் தமிழக பாஜக.வுக்கு அவர் தந்த ஊக்கமும் என்றும் நினைவு கொள்ளத்தக்கது.

பங்காரு லட்சுமணனின் மறைவு பாஜக.வுக்கு ஈடு இணையற்ற இழப்பாகும். அவரது ஆன்மா நற்கதி அடைய அன்னை பராசக்தியை வேண்டுகிறேன். அவரது குடும்பத்தினருக்கு தமிழக பாஜக. சார்பில், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அந்த இரங்கல் செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply