சில்லறை வணிகத்தில் நேரடி அன்னியமுதலீட்டில் பாஜக.,தனது நிலைப்பாட்டை மாற்றிவிட்டது என்பதனை மறுத்துள்ளார் பாஜக.,மூத்த தலைவர் அருண் ஜேட்லி.

இது குறித்து செய்திசேனல் ஒன்றிக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டில் எங்களது நிலையில் மாற்றமில்லை.

கொள்கையில் மாற்றம் ஏற்படலாம். ஆனால் உண்மையான கொள்கையில் மாற்றம் இருக்காது. உற்பத்தி துறையில் சீர்திருத்தங்கள் செய்யும்போது மாற்றங்கள் ஏற்படலாம். அதுமட்டும் அல்லால் குறைந்த விலையில் உற்பத்திபொருட்கள் கிடைக்கின்றன என்றால் அது மாற்றம்தான். கொள்கை அளவில் மாற்றம் இல்லை.அடுத்த 100 ஆண்டுகளுக்குகூட மாற்றம் இல்லை என்றார்.உற்பத்தி செலவில் மாற்றம் வரும்போது அதை செயல்படுத்தும் போது என்ன நடக்கும் என்று எனக்கு தெரியாது என்றார்

Leave a Reply