லோக்சபா தேர்தலில் மூன்றாவது அணி என்பது காங்கிரஸைக் காப்பாற்றுவதற்காகத் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது என குஜராத் முதல்வரும் பாஜக.,வின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திரமோடி சாடியுள்ளார்.

பீகார் மாநிலம் முசாபர்பூரில் பாஜக தேர்தல் பிரசார பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் ஒரேமேடையில் பங்கேற்று பேசினர்.

இக்கூட்டத்தில் நரேந்திரமோடி பேசியதாவது: பீகார் மாநிலத்திற்கு அழைப்பை ஏற்றுகடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி வந்தேன். நான் வந்தபோது பாட்னாவில் பல்வேறு இடங்களில் தொடர் வெடி குண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பில் பொதுமக்கள் பலியானர்கள் மற்றும் காயம் அடைந்தனர். இது பீகாருக்குமட்டும் காயம் இல்லை நாட்டுக்கே ஏற்பட்டகாயம். ஆனாலும் பீகார் மக்கள் ஒற்றுமை, சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தில் உறுதியாக உள்ளனர்.

ஒற்றுமை மற்றும் அமைதி இல்லாமல் இந்தியாவால் முன்னேறமுடியாது. பாஜக தலைவர்களுக்கு எதிரான எச்சரிக்கைகளை பற்றி நான் கவலைப்பட வில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி விரிவானது. நான் ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் அவரது மகன் சிராங் பாஸ்வானை நமதுகுடும்பத்திற்கு வரவேற்கிறேன். நாம் வளர்ச்சி அடைந்துவரும் நிலையில் மற்றவர்களின் கவலைகள் மேலும் வளர்ந்துவருகிறது. நமது கூட்டணி தேசியளவிலான வளர்சிக்கான கூட்டணி.

ஜார்ஜ்பெர்னாண்டஸ் நன்றாக இருப்பதற்கு வாழ்த்துகிறேன். அவரது உடல் நிலை மீண்டும் சீரடைய நான் வேண்டுகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி விரிவானது. நான் ராம்விலாஸ் பாஸ்வான் மற்றும் சிராங் பாஸ்வானை நமது குடும்பத்திற்கு வரவேற்கிறேன். நாம் வளர்ச்சி அடைந்து வரும்நிலையில் மற்றவர்களின் கவலைகள் மேலும் வளர்ந்துவருகிறது.

இந்த மூன்றாவது அணிஎன்பது என்ன? அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கே ஆதரவு அளிப்பார்கள். மூன்றாவது அணியால் நிலையான தலைவர்களை கொடுக்கமுடியாது. பொதுவாழ்வில் பாசாங்குக்கு எந்த இடமும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ராம்விலாஸ் பாஸ்வான் விலகிய போதும் அவர் என்னை எங்கு எல்லாம் சந்திக்கிறாரோ அப்போது எங்களுடன் சுமூகமாக பேசிகொள்வார். அவர் பத்திரிக்கைகள் இருவரது போட்டோக்களை போடுவதை பற்றி கவலைப்படமாட்டார். ஆனால் சிலதலைவர்கள் மூடியகதவுகளுக்கு பின்னால் சுமூகமான முறையில் பேசுவார்கள் ஆனால் பொதுமக்கள் முன்னிலையில் பேச தயங்குவார்கள் என்று மோடி பேசினார்.

Leave a Reply